/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி
/
ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி
ADDED : ஜூன் 27, 2025 05:22 AM
தேனி: சமூக நலத்துறை சார்பில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு பல்வேறு தையல், அலைபேசி பழுது பார்த்தல், கணினி பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்த்தல், மருத்துவ உதவியாளர், ஆரி வேலைகள் என 52 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிகள் இலவச பயிற்சிகளாகும்.
பயிற்சிகள் தேனி நலம் மருத்துவமனை, ஆண்டிபட்டி, போடி, தேனி, கோட்டூர் அரசு ஐ.டி.ஐ.,க்களில் வழங்கப்படுகிறது. பயிற்சிகள் தொடர்பான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 04546 -- 254 368 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சமூக நலத்துறையினர் தெரிவித்தனர்.