ADDED : ஆக 30, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நேற்று காலை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கம்பத்தை சேர்ந்த திவாகர் என்ற மணமகனுக்கும், ஆண்டிபட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மணமகளுக்கும் திருமணம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் 4 கிராம் தங்க தாலி, பட்டு வேட்டி, சேலை, கட்டில், பீரோ, மிக்சி, பாத்திரங்கள், மணமக்களுக்கு கடிகாரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. கம்ப ராயப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் பொன்முடி முன்னிலையில் நகராட்சித் தலைவர் வனிதா திருமணத்தை நடத்தி வைத்தார். உடன் மணமக்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள், வழக்கறிஞர் நெப்போலியன், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.