/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதில் வனத்துறை குழப்பம்

ADDED : ஜன 24, 2025 05:23 AM
கம்பம்: சுருளி அருவி பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் நடமாடுவதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
சுருளி அருவியில் குளிக்க தினமும் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கோடை காலங்களில் அருவி வறண்டு இருக்கும். பருவ மழை காலங்களில் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.
வெள்ளப் பெருக்கு ஏற்படும் நாட்களில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்படும்.
யானைகள் நடமாட்டம் இருக்கும் நாட்களிலும் அருவியில் குளிக்க தடை விதிப்பார்கள்.
தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது.
வெண்ணியாறு, சுருளி அருவி, வண்ணாத்தி பாறை வழியாக தேக்கடி வனப்பகுதிக்கு செல்வதும், பின்னர் அங்கிருந்து அருவி பகுதிக்கு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும். அந்த பகுதியில் யானைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதாக கூறுகின்றனர். இப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால், அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த ஜன.22 ல் யானைகள் வந்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஆனால் ஜன . 23 ல் யானைகள் சென்றதால் குளிக்க அனுமதியளிக்கப்பட்டது.
பொதுமக்கள் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது யானைகள் கூட்டம் வந்து விட்டால் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.