/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பனி தாக்கத்தால் பச்சை மிளகாயில் கருகல் நோய்
/
பனி தாக்கத்தால் பச்சை மிளகாயில் கருகல் நோய்
ADDED : பிப் 01, 2024 04:03 AM

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி பகுதியில் பனியின் தாக்கத்தால் பச்சை மிளகாய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புதுார், ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, பாலக்கோம்பை உட்பட பல கிராமங்களில் பச்சைமிளகாய் சாகுபடி ஆகிறது. ஆடியில் நடவு செய்த செடிகளில் கடந்த இரு மாதங்களாக பச்சை மிளகாய் விளைச்சல் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது பனியின் தாக்கம் அதிகம் உள்ளதால் கருகல் நோய் ஏற்பட்டு பச்சை மிளகாய் சொத்தை ஆகிறது. விவசாயிகள் கூறியதாவது:
ஏக்கருக்கு ஒரு எடுப்பில் 3 டன் வரை விளைச்சல் கிடைக்கும். பனியின் தாக்கத்தால் சொத்தை அதிகமாகிறது. தற்போது பச்சை மிளகாய் விலை கிலோ ரூ.30 முதல் 40 வரை உள்ளது.
மிளகாய் சாகுபடியில் செலவு அதிகம் இருப்பதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்., என்றனர்.