ADDED : அக் 18, 2024 05:55 AM

போடி: போடி வினோபாஜி காலனி அருகே உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. கிருஷ்ணருக்கு 11 வகை அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.