/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மீறுசமுத்திர கண்மாய் சீரமைக்க ரூ.7.4 கோடி நிதி ஒதுக்கீடு: படகு குழாம், நடைபயிற்சி தளம் பூங்கா அமைகிறது

ADDED : ஏப் 04, 2025 05:30 AM

மாவட்டத்தின் தலைநகர் தேனியில் மக்கள் பொழுது போக்கு அம்சங்கள் இல்லாததால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அணைகள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.
நகரில் பெரியகுளம் ரோடு உழவர்சந்தை அருகில் மீறுசமுத்திர கண்மாய் 106 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்த கண்மாய் நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், பார்ப்பதற்கு கடல்போல் பரந்து விரிந்து காட்சியளிக்கும். இந்த கண்மாயிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய்கள் மூலம் நீர் வரத்து உள்ளது.
இந்த கண்மாயை சுற்றி பொழுது போக்கு அம்சங்களுடன் பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின் போது மீறுசமுத்திர கண்மாயில் படகு சவாரி ஏற்படுத்தப்படும் என அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.நகராட்சி கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நீர்வளத்துறை சார்பில் கண்மாயில் வளர்ந்துள்ளஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கப்பட உள்ளது.
இதுபற்றி நீர்வளத்துறையினர் கூறுகையில், 'மீறு சமுத்திர கண்மாய் சீரமைப்பு, மேம்பாட்டிற்காக அரசு ரூ.7.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகள் அகற்றப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி கண்மாயை சுற்றி சுமார் 1.8 கி.மீ., துாரத்திற்கு நடைபயிற்சி தளம், மின் விளக்கு வசதியுடன் அமைகிறது.
கண்மாய் மையப்பகுதியில் பறவைகள் தங்கும் வகையில் சிறிய குறுங்காடு அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. கண்மாய் கரையில் ஓரிடத்தில் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய பூங்கா அமைகிறது. மேலும் படகு குழாம் அமைக்க உள்ளோம். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,' என்றனர்.