/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிய காளைகள்
/
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிய காளைகள்
ADDED : அக் 11, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கம்பமெட்டு ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
நேற்று காலை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி மட்டுமின்றி பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். கம்பமெட்டு ரோட்டில் 8 கி.மீ. தூரத்திற்கு போட்டிகள் நடைபெற்றது. தட்டான் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான், தேன்சிட்டு, நடு மாடு, பெரிய மாடுஆகிய ஆறு பிரிவுகளில் 120 வண்டிகள் பங்கேற்றன.
இப் போட்டியை ரோட்டின் இருபுறமும் நின்று பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.