/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கெடுபிடி: அறுவை சிகிச்சை நோயாளிகள் புலம்பல்
/
கம்பம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கெடுபிடி: அறுவை சிகிச்சை நோயாளிகள் புலம்பல்
கம்பம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கெடுபிடி: அறுவை சிகிச்சை நோயாளிகள் புலம்பல்
கம்பம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கெடுபிடி: அறுவை சிகிச்சை நோயாளிகள் புலம்பல்
ADDED : நவ 12, 2024 05:42 AM
கம்பம்: அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக சேரும் பெண்களுக்கு ரத்த சேமிப்பு வங்கியின் கெடுபிடியால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உலகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத ஒரே பொருள் ரத்தம் மட்டுமே. அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சைகள், பிரசவங்களில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் பிற அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படும். மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளம் மாவட்ட மருத்துவமனை, கம்பம், போடி மருத்துவமனைகளில் ரத்த வங்கிகள் உள்ளது.
இந்த வங்கிளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்ததான முகாம்களை நடத்தி ரத்தம் சேகரிக்கின்றனர். தொண்டு நிறுவனங்களும் முகாம்கள் நடத்தி ரத்ததானம் வழங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் குருதி கொடையாளர்கள் பட்டியல் வைத்துள்ளனர். அவசர தேவைக்கு அவர்களை அழைத்து ரத்த தானம் பெற்று நிலைமையை சமாளிக்கின்றனர்.
ஆனால் மருத்துவமனைகளில் நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சைக்கோ அல்லது ஒரு பெண் பிரசவத்திற்கோ சேர்க்கப்பட்டால், அவரின் ரத்த குரூப் வகை ரத்த தானம் கொடுங்கள் என நோயாளியின் உறவினர்களை மருத்துவமனையில் வலியுறுத்துகின்றன. இதனால் அவர்கள் ரத்த கொடையாளர்களை தேடி அலையும் நிலை பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட குரூப் வகை ரத்தம் இருப்பு இருந்தாலும், அனுமதிக்கப்பட்டவரின் உறவினர் ரத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.கம்பம் அரசு மருத்துவமனையில் இத் தகைய கெடுபிடி அதிகமாக உள்ளது.
இது குறித்து கம்பம் அரசு மருத்துவமனைகளில் விசாரித்த - போது, அட்மிட் ஆனவருக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருந்தால் அவரின் உதவியாளரிடம், நெருங்கிய உறவினரிடம் ரத்த தானம் கேட்போம். இதற்கு காரணம் இவரை போன்று அடுத்து வரும் நோயாளிகளுக்கு பயன்படும் என்பது தான்.
அவர் கொடுக்கவில்லை என்றாலும் நோயாளிக்கு ரத்தம் செலுத்தி அவரை காப்பாற்றி விடுவோம். ரத்தம் எப்போதும் மருத்துவமனைகளில் இருப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கின்றனர். டாக்டரின் வாதம் சரிதான் என்றாலும், ஏழைகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் ரத்ததானம் பெற என்ன செய்வார்கள் என்பதை மருத்துவத்துறை தான் விளக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர்.