ADDED : ஆக 30, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்ய 4 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்த தாடிச்சேரி நடுத்தெரு மகேஷ்குமாரை 29, போலீசார் ஆக.4ல் கைது செய்தனர். அவரை மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர்.
எஸ்.பி., சினேஹா பிரியா பரிந்துரையில் மகேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.