/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தும் குரங்குகள்
/
வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தும் குரங்குகள்
ADDED : ஆக 30, 2025 04:36 AM

கூடலுார்: கூடலுாரில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது கூடலூர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் குரங்குகள் கூட்டமாக நுழைந்து விளைப் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடலுார், லோயர்கேம்ப் குடியிருப்புப் பகுதிகளிலும் குரங்குகள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனப்பகுதி எல்லையில் இருந்து குடியிருப்புகள் 3 கி.மீட்டருக்கு மேல் துாரமாக தூரமாக இருப்பதால் குரங்குகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.