ADDED : செப் 25, 2024 05:08 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்து சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலில் எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு டூவீலரில் சந்தேகப்படும் வகையில் நின்றவரிடம் விசாரித்தனர்.
அவரிடம் 1.250 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் பிடிபட்ட நபர் குமணன்தொழுவைச் சேர்ந்த ஆனந்த் 34, என்பது தெரியவந்தது. ஆனந்த் தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த மகேந்திரபிரபு என்பவரிடம் கஞ்சா வாங்கி, பொன்னம்படுகை ராமச்சந்திரன் 27, வீரபாண்டி குணால் ஆகியோர் மூலம் பலருக்கும் விற்பனை செய்வதையும் ஒப்புக்கொண்டார். ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்த போலீசார், மகேந்திரபிரபு, குணால் ஆகியோரை தேடி வருகின்றனர்.
வருஷநாடு எஸ்.ஐ.,ஜெகநாதன் மற்றும் போலீசார் சிங்கராஜபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற போது சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி 43, உப்புத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார் 30, ஆகியோர் விற்பனைக்கு வைத்திருந்த 1.250 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். இவர்களுக்கு கஞ்சா விநியோகித்த தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த மகேந்திரபிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.