ADDED : செப் 20, 2024 06:34 AM
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே கொங்கரேவு ஓடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மயிலாடும்பாறை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 390 கிராம் கஞ்சா இருந்துள்ளது. சில்லறை விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பள்ளத்தூரை சேர்ந்த ஜெயராமன் 52, கோம்பைத்தொழு கருப்பசாமி 19, பாண்டீஸ்வரன் 20, தெய்வேந்திரன் 39, அரண்மனைபுதூர் ஈஸ்வரன் 34,கைது செய்தனர்.
மலை கிராமங்களில் வேறு எங்கேயும் கஞ்சா சில்லறை விற்பனை நடக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போடி: போடி நந்தவனம் தெருவை சேர்ந்தவர் குருசாமி 51. இவர் முந்தல் ரோட்டில் பையுடன் நின்று இருந்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் குருசாமியின் பையை சோதனை செய்தனர். அதில் ஒருகிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில் போடி கீழத்தெருவை சேர்ந்த பாண்டி 45. என்பருடன் கோடாங்கிப்பட்டி சொசைட்டி தெருவை சேர்ந்த பெரியகருப்பன் 56,என்பவரிடம் கஞ்சா வாங்கி, சில்லறையில் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது தெரிந்தது.
போடி டவுன் போலீசார் குருசாமி, பாண்டி, பெரியகருப்பன் மூவரையும் கைது செய்ததோடு, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.