/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி வாகனங்களில் இருந்து சிதறும் குப்பையால் சிரமம்
/
நகராட்சி வாகனங்களில் இருந்து சிதறும் குப்பையால் சிரமம்
நகராட்சி வாகனங்களில் இருந்து சிதறும் குப்பையால் சிரமம்
நகராட்சி வாகனங்களில் இருந்து சிதறும் குப்பையால் சிரமம்
ADDED : பிப் 14, 2025 12:54 AM

பெரியகுளம்; பெரியகுளம் நகராட்சி குப்பை சேகரிப்பு வாகனத்தின் மீது வலை விரித்து மூடாமல் செல்வதால், குப்பை பறந்து ரோட்டில் செல்வோர் மீது விழுவதால் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை லாரி, மினி லாரி மூலம் எ.புதுக்கோட்டை அருகே நகராட்சி உரங்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
டிரைவர்கள் வாகனங்களில் குப்பை கொண்டு செல்லும் போது ரோட்டில் குப்பை பறந்து சிதறுவதை தடுக்க வாகனங்கள் மீது வலை விரித்து மூடி உரக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால் இந்த உத்தரவை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. வாகனங்களில் வலை மூடி போடாமல் செல்வதால் குப்பை காற்றுக்கு பறந்து ரோட்டில் டூவீலர் ஓட்டிச் செல்பவர்கள் மீது படுகிறது. நேற்று முன்தினம் எண்டப்புளியைச் சேர்ந்த ஒருவர் பெரியகுளத்திலிருந்து செல்லும் போது பெட்ரோல் பங்க் அருகே வாகனத்திலிருந்து பறந்த எச்சில் இலை அவரது சட்டையில் பட்டது. இதனால் வேதனைப்பட்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூய்மை படுத்த தண்ணீர் கொடுத்து உதவினர்.
நகராட்சி நிர்வாகம் குப்பை கொண்டு செல்லும் வாகனத்தின் டிரைவர்கள் வலை மூடி போட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

