/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
/
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ADDED : அக் 03, 2024 06:27 AM
கம்பம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டி மகாத்மா காந்தி ஆலயத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஒய்வூதியர் சங்க தலைவர் அரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். கஸ்துாரிபாய் பள்ளிகளின் தாளாளர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் வேல்முருகன், ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள், தியாகிகளின் வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கம்பம் மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு நகர் காங். தலைவர் போஸ் உள்ளிட்ட காங். கட்சி நிர்வாகிகள் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அதன் தலைவர் நாகராசன், மாவட்டச் செயலாளர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு பொது நல அமைப்புக்களை சேர்ந்தவர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சுருளி அருவியில் கவிஞர் பாரதன், வக்கீல்கள் முத்துகுமரன், சத்திய மூர்த்தி, பொன் காட்சி கண்ணன் உள்ளிட்ட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். -
சின்னமனூர் : இங்குள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா சிலைக்கு தலைமை ஆசிரியர் முனிராசா, பள்ளி தாளாளர் மாரிமுத்து, நிர்வாக குழு தலைவர் சிவமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், இளங்கோவன், பாண்டியன், உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

