/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேட்வால்வு சிலாப் சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
/
கேட்வால்வு சிலாப் சேதம்; வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : பிப் 03, 2024 04:25 AM

கூடலுார் : கூடலுார் முக்கிய சந்திப்பில் குடிநீர் கேட் வால்வு சிலாப் சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்காததால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
கூடலுார் சுந்தரவேலவர் கோயில், என்.எஸ்.கே.பி. புதுக்களம் சந்திப்பிலிருந்து மொள்ளுதிருப்பதி கவுண்டர் தெருவிற்கு செல்லும் வழியில் குடிநீர் கேட்வால்வு உள்ளது. இதன் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட சிலாப் பல மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இரவில் டூவீலரில் வருபவர்கள் பள்ளம் தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இது குறித்து பலமுறை நகராட்சியில் அப்பகுதி மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உடனடியாக இப்பகுதியில் சிலாப் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

