ADDED : அக் 03, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: முத்துத்தேவன்பட்டி பிரிவு பைபாஸ் ரோட்டில் இருந்து கவுமாரியம்மன் கோயிலுக்குசெல்லும் வழியில் உள்ள பாலத்தின் அருகில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாய் அடிக்கடி பழுதடைகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பழுதினை சரிசெய்ய ரோடுதோண்டப்பட்டது.தற்போது தோண்டப்பட்ட இடத்தில் ரோடு குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர். இப்பகுதியில் இரவில் போதிய வெளிச்சமும் இல்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது.சேதமடைந்த பகுதியில் ரோட்டினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.