/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு வாகனத்திற்கு தேனியில் வரவேற்பு
/
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு வாகனத்திற்கு தேனியில் வரவேற்பு
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு வாகனத்திற்கு தேனியில் வரவேற்பு
'கேலோ' இந்தியா விழிப்புணர்வு வாகனத்திற்கு தேனியில் வரவேற்பு
ADDED : ஜன 18, 2024 06:08 AM
தேனி : தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த கேலோ இந்தியா விழிப்புணர்வு வாகனத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் ஜன.,19 முதல் ஜன., 31 வரை நடக்க உள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் 25க்கும் மேற்பட்ட போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மாரத்தான் போட்டி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் பயணம் ஜன.,7 ல் துவங்கியது. இந்த வாகனத்தில் வேலுநாச்சியாளர் உருவ ஐகான், கேலோ இந்தியா போட்டிக்கான தீபம் ஆகியன வரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த வாகனத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு , முதல்வர் கோப்பையில் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 பேருக்குசான்றிதழ் வழங்கப்பட்டது. உள் விளையாட்டு அரங்கில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. விழாவை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தார். இந்த வாகனம் நேற்று மாலை திண்டுக்கல் சென்றது.