தேனி: டி.என்.டி., மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், அல்லிநகரத்தில் உள்ள இயக்கத்தின் அலுவலகத்தில் முதல் பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் வனராஜா தலைமை வகித்தார். நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் செயலாளர் மணிகண்டன், நிறுவனத் தலைவர் அன்பழகன், தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் பாண்டியன், அமைப்புச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். புதிய பொதுக்குழு உறுப்பினர்களாக தவமணி, மலைச்சாமி, மாயி, மணிகண்டன், ஜெயக்குமார் தேர்வு செய்து, அறிவிக்கப்பட்டனர்.
கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அக்.2ல் அறிவித்தபடி அரசாணை வெளியிடாவிட்டால், அக்.2 முதல் தி.மு.க., அரசை கண்டித்து தொடர் பிரசாரம் துவக்கப்படும். டி.என்.டி., சமூகத்தினரின் வாரிசுதாரர்களுக்கு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.