ADDED : செப் 19, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.20–
தேனியில் அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட அளவிலான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க மாநில தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தேனி மாவட்ட தலைவராக ரதவேல், செயலாளராக பிரபு, பொருளாளராக நல்லசிவம், துணைத்தலைவராக செல்ல பாண்டியன், இணை செயலாளராக திருப்பதி, செயற்குழு உறுப்பினராக பிரவேந்திரன் தேர்வாகினர். இதில் மாவட்ட செயலாளர் சுருளி, மாநில துணைத்தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
