
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: சுருளிப்பட்டி அன்பு அறம் செய் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை, வ.உ.சி., வெள்ளாளர் சங்கம் இணைந்து கூடலுாரில் பொது மருத்துவ முகாம் நடத்தியது.
அறக்கட்டளை நிறுவனர் அன்புராஜா முன்னிலையில், கிரிதரன், லோகநாயகி துவக்கி வைத்தனர். டாக்டர் சிவப்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இதயம், நுரையீரல், கல்லீரல் சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய், மூச்சு திணறுலுக்கான சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
அறக்கட்டளை நிறுவனர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.