ADDED : செப் 08, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மேலசிந்தலைசேரி ராஜா.
இவரது மனைவி அங்காளீஸ்வரி 35. இவர்களது மகள் தன்ஷிகா 13. சின்னமனுாரில் நடந்த உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்று அங்காளீஸ்வரி, தன்ஷிகா ஆட்டோவில் வீடு திரும்பினர். ஆட்டோவை கோம்பை சிங்காரநகர் கோபிகிருஷ்ணன் ஓட்டினார். மேலசிந்தலைசேரி அருகே வந்த போது ரோட்டோர கல்மீது ஆட்டோ ஏறி, ஒரு புறமாக கீழே சாய்ந்து விழுந்தது. இதில் தன்ஷிகா ஆட்டோவிற்கு கீழ் மாட்டி கொண்டார். ஆட்டோவை அருகில் இருந்தவர்கள் துாக்கினர். கீழே கிடந்த தன்ஷிகா தலையில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.