/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிமென்ட் துாண் தலையில் விழுந்து சிறுமி பலி
/
சிமென்ட் துாண் தலையில் விழுந்து சிறுமி பலி
ADDED : செப் 16, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - அன்னலட்சுமி தம்பதி மகள் அஜிதாஸ்ரீ, 4.
நேற்று முன்தினம் வீட்டின் முன், இரு சிமென்ட் துாண்களுக்கு இடையே கயிறு கட்டப்பட்டு, துணி காய போட்டிருந்தனர். துணிகளை இழுத்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, துாண் ஒன்று, சிறுமி தலை மீது விழுந்தது.
இதில், அஜிதாஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்; அப்பகுதியினர் மீட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி உயிரிழந்தார்.