/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் ஒருவர் கைது
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் ஒருவர் கைது
ADDED : பிப் 23, 2024 05:47 AM
மூணாறு : மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியான மாற்றுத் திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த மாங்குளம் சிக்கனம்குடியைச் சேர்ந்த சன்னி 28, யை போலீசார் ' போக்சோ' வில் கைது செய்தனர்.
மூணாறு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பேச்சு, கேள்வி திறன் கிடையாது. அவரது தாயார் இறந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் வசித்தார்.
அவரை, சன்னி காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் சன்னியை ' போக்சோ' வில் கைது செய்தனர். சிறுமி பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார்.