/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கண்ணாடி கொட்டகை வசதி
/
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கண்ணாடி கொட்டகை வசதி
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கண்ணாடி கொட்டகை வசதி
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சம் செலவில் கண்ணாடி கொட்டகை வசதி
ADDED : ஜூலை 02, 2025 07:17 AM
உத்தமபாளையம் :உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் தேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் கண்ணாடி கொட்டகை அமைக்கப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் தேர் ஊரின் கிழக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் ஓடாமால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை, ஊரின் அனைத்து சமூகத்தினரும் இணைந்து புதுப்பித்து தேரோட்டம் நடத்தி வருகின்றனர்.
உயரமான இந்த தேர், தகரங்களால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் பறவைகள் எச்சம் விழுந்து தேர் அசுத்தமாகும். இதை தவிர்க்க பெரிய கோயில் தேர்கள் கண்ணாடிகளால் மூடப்பட்டு, அதற்கு மேல் பிளாஸ்டிக் கவர் போர்த்தி வெளியில் எப்போதும் தெரியும் படி வசதி செய்யப்படுகிறது.
உத்தமபாளையம் தேருக்கு ரூ.21 லட்சத்தில் கண்ணாடி கொட்டகை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
சின்னமனூர் தேருக்கும் விரைவில் கண்ணாடி கொட்டகை அமைக்கும் பணி துவங்க உள்ளதாக ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.