/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்வி சேவையில் கோலோச்சும் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி
/
கல்வி சேவையில் கோலோச்சும் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி
கல்வி சேவையில் கோலோச்சும் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி
கல்வி சேவையில் கோலோச்சும் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி
ADDED : அக் 01, 2025 10:16 AM
--பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் 1943 ல் துவங்கப்பட்டது 'டிரயம்ப்' நடுநிலைப்பள்ளி. (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) இப்பள்ளியில் மாணவராக படித்து, ஆசிரியராக உயர்ந்து, கடின உழைப்பினால் தலைமை ஆசிரியராகவும், பள்ளி செயலாளராகவும் பணியாற்றும் எஸ். ராம்சங்கர் கூறியதாவது: இப்பள்ளியில் ஒழுக்கத்துடன் கல்வி கற்று தரப்படுகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் கலெக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., டாக்டர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர், பொறியாளர்கள், ஆடிட்டர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகின்றனர். தொடர்ந்து முதன்மை பள்ளியாக தக்க வைத்துள்ளோம். 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
83 ஆண்டு கால கல்விப்பணி, மத்திய, மாநில அரசு விருது, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி, மாநில இளம் அறிவியல் விஞ்ஞானி தேர்வில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி சிறப்பு கவனம் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை மற்றும் அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படுகிறது என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சங்கர், கல்வி முகமை மீனாட்சி, ஆசிரியர்கள், ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மேற்பார்வையில் சிறந்து விளங்குகிறது.
முகவரி: டிரயம்ப் நடுநிலைப் பள்ளி, 28, தெற்கு அக்ரஹாரம்,
தென்கரை, பெரிய குளம்.--