ADDED : ஏப் 19, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; புனித வெள்ளியை முன்னிட்டு போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் அருண் பவியான் தலைமையில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது.
இயேசு சிலுவை சுமந்த 14 இடங்களை நினைவு கூறப்பட்டு, சிலுவை பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
கம்பம்:- கம்பம் ஆரோக்கிய அன்னை சர்ச்சில் புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடைபெற்றது. சர்ச் வளாகத்தில் பாதிரியார் பாரிவளவன் தலைமையில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவை சுமந்து சென்ற 14 இடங்கள் நினைவு கூறப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அருட்பணி பேரவை, நிதிக் குழு, விழாக்குழு, சேவா மிஷினரி மற்றும் திரளாக கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

