/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி பஸ் ஸ்டாண்ட் திறப்பில் மின் ஒயரில் சிக்கிய அரசு பஸ்
/
குமுளி பஸ் ஸ்டாண்ட் திறப்பில் மின் ஒயரில் சிக்கிய அரசு பஸ்
குமுளி பஸ் ஸ்டாண்ட் திறப்பில் மின் ஒயரில் சிக்கிய அரசு பஸ்
குமுளி பஸ் ஸ்டாண்ட் திறப்பில் மின் ஒயரில் சிக்கிய அரசு பஸ்
ADDED : டிச 19, 2025 05:41 AM

கூடலுார்: குமுளி பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவின் போது உள்ளே சென்ற தமிழக அரசு பஸ் மின்ஒயரில் சிக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து துறை சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு நேற்று அமைச்சர்கள் பெரியசாமி, சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இவ்விழா முடிவடைந்ததும் முதன் முறையாக அரசு பஸ் நுழைவாயிலில் வந்த போது தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றிருந்த மின் ஒயர் தாழ்வாக சென்றதால் ஓயர் உரசியது. பஸ் இயக்காமல் அப்படியே நின்றது. போக்குவரத்து ஊழியர்கள் இரு பகுதிகளிலும் வயரை தூக்கிப் பிடித்து பஸ்சை மெதுவாக வெளியேற்றினர். புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையத்தில் அரசு பஸ் மின்ஒயரில் மாட்டிக் கொண்ட சம்பவத்தால் ஒருமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.