/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணை கொல்ல முயற்சி அரசு பஸ் டிரைவர் கைது
/
பெண்ணை கொல்ல முயற்சி அரசு பஸ் டிரைவர் கைது
ADDED : அக் 03, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அருகே பெண்ணை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற அரசு பஸ் டிரைவர் பால்ராஜ் 45, பழனிசெட்டிபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேனி கொடுவிலார்பட்டி அருகே உள்ள மரியாயிபட்டி பழனியம்மாள் 53. இவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த வீட்டினை இடித்தார். பின் புதிய வீடு கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். இடம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பால்ராஜ், பெருமாள்சாமி, ஈஸ்வரன் பழனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து பழனியம்மாள் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்தனர். அரசு பஸ் டிரைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர்.