/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாமரைக்குளம் வழித்தடத்தில் செல்லாத அரசு பஸ்கள் சப்கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
தாமரைக்குளம் வழித்தடத்தில் செல்லாத அரசு பஸ்கள் சப்கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தாமரைக்குளம் வழித்தடத்தில் செல்லாத அரசு பஸ்கள் சப்கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தாமரைக்குளம் வழித்தடத்தில் செல்லாத அரசு பஸ்கள் சப்கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 02:34 AM
பெரியகுளம்: ''பெரியகுளம் தாமரைக்குளம் வழியாக வழித்தடங்கள் பெற்றும், புறக்கணிக்கும் அரசு, தனியார், மினி பஸ்களின் நிர்வாகங்களின் மீது, சப் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து வைகை அணை, ஆண்டிபட்டியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கும், கல்லுாரி, பள்ளிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இங்கு வெற்றிலை கொடிக்கால், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயிகள் வெளியூர்களில் இடுபொருட்கள் வாங்க பஸ்களில் சென்று வருகின்றனர். மேலும் சப்கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் மனுக்கள் கொண்டு வருகின்றனர். தனியார் மகளிர் கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி, துவக்கப் பள்ளி இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
பெரியகுளத்தில் இருந்து தாமரைக்குளம் வழியாக ஆண்டிபட்டி வரை ஏழு அரசு பஸ்கள் வழித்தடங்களும், இரு தனியார் பஸ்களும், நான்கு மினி பஸ்களும் இந்த வழியாக இயங்கி வருகின்றன. சில மாதங்களாக இதில் பெரும்பாலான பஸ்களும் இந்த வழித்தடத்தில் செல்வதில்லை. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சப்கலெக்டர் நடவடிக்கை தேவை வைகை அணை ஆண்டிபட்டி செல்லும் மாணவ, மாணவிகள், தாமரைக்குளத்தில் இருந்து கண்மாய்க்கரை வழியாக ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று, அங்கிருந்து பெரியகுளம் -வடுகபட்டி ரோடு பங்களாப்பட்டி பிரிவு அருகே ஏறிச் செல்கின்றனர். இதே நிலை அவர்கள் மீண்டும், வீடு திரும்பும் போது ஏற்படுகிறது. சப்கலெக்டர் ரஜத்பீடன், வழித்தடங்களை புறக்கணிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-