/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி - பெரியகுளம் ரோட்டில் விளக்கு வசதி இன்றி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்; கண்ணாமூச்சி ஆடும் அரசு துறைகள்
/
தேனி - பெரியகுளம் ரோட்டில் விளக்கு வசதி இன்றி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்; கண்ணாமூச்சி ஆடும் அரசு துறைகள்
தேனி - பெரியகுளம் ரோட்டில் விளக்கு வசதி இன்றி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்; கண்ணாமூச்சி ஆடும் அரசு துறைகள்
தேனி - பெரியகுளம் ரோட்டில் விளக்கு வசதி இன்றி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்; கண்ணாமூச்சி ஆடும் அரசு துறைகள்
ADDED : ஆக 06, 2025 07:59 AM
தேனி : தேனி பெரியகுளம் ரோட்டில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் போதிய விளக்கு வசதி இல்லாததால் தினமும் விபத்துக்களில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துவருகின்றனர்.
தேனி பெரியகுளம் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி எல்லையான பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோவில் வரை ரோட்டின் மையத்தடுப்பில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவில் இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களையும், நடந்து செல்பவர்களும் வாகனங்களை வருதை துாரத்தில் இருந்தே பார்க்க முடிகிறது.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால் ஊராட்சி எல்லையான சுக்குவாடன்பட்டி பிரிவு, ராம்நகர், மரிய ஜோசப் நகர், ரத்தினம் நகர், ஈஸ்வர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.மாநில நெடுஞ்சாலையில் இந்த குடியிருப்புபகுதிகளுக்குசெல்லும் பல இணைப்பு ரோடுகள் இணைகின்றன.
இது தவிர இந்த பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி இருளாக உள்ளதால் ரோட்டை கடக்கும் போது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அரசுத்துறைகள் அலட்சியம்
இப் பகுதி ஊராட்சிக்கு உட்பட்டது என்பதால் சென்டர் மீடியன்விளக்கு அமைக்க முடியாது என ஊராட்சி நிர்வாகம் தப்பித்து கொள்கின்றனர். இதற்கு பதிலாக ஒன்றிரண்டு தெரு விளக்குகளை ரோட்டோரங்களில் அமைத்துள்ளனர்.
அவை எரிந்தாலும் பலனில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறை ரிப்ளக்டர்கள் பொருத்தவில்லை. ரோடுசந்திப்புகள் உள்ளதை குறிப்பிட எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. ரத்தினம் நகர் பகுதியில் ரோடு சந்திப்புபகுதியில் உள்ள உயர்மின் கோபுரம் காட்சி பொருளாகவே உள்ளது.
இதுபோன்ற அரசுத்துறை அலட்சியங்களால் பொம்மையகவுண்டன்பட்டி முதல் அன்னஞ்சி விலக்கு வரை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு பெரியகுளம் ரோட்டில் சென்டர் மீடியனில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.