/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லோக்சபா தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால் அரசு டிரைவர்கள் ஏமாற்றம்
/
லோக்சபா தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால் அரசு டிரைவர்கள் ஏமாற்றம்
லோக்சபா தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால் அரசு டிரைவர்கள் ஏமாற்றம்
லோக்சபா தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால் அரசு டிரைவர்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 27, 2025 04:05 AM
தேனி: லோக்சபா தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்காததால் அரசுத்துறைகளில் பணிபுரியும் டிரைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் கடந்தாண்டு மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் கடந்தாண்டு ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலுக்காக வருவாய்த்துறை மட்டுமின்றி வேளாண், ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி என பல்வேறு துறையினரும் பணிபுரிந்தனர். அந்தந்த துறைகளின் டிரைவர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வருவாய் உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கான மதிப்பூதியம் 2024 நவம்பரில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை தேர்தல் பணிபுரிந்த டிரைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட வில்லை.
இதுகுறித்து அரசுத்துறை டிரைவர்கள் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் அனைத்துத்துறை டிரைவர்களும் இரவு பகலாக பணிபுரிந்தனர். ஆனால் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள், அலுவலர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டதால் பொங்கலுக்கு முன் மதிப்பூதியம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் டிரைவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டிரைவர்களுக்கான மதிப்பூதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

