ADDED : பிப் 15, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் 42. இவர் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக வேலை செய்தார். அதிகளவில் கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று மணிமாறன் வீட்டில் வாந்தி எடுத்தார்.
இவரது மனைவி சிவா, ஆட்டோவில் தேவதானப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மணிமாறனை அழைத்து சென்றார். பரிசோதித்த டாக்டர் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மணிமாறனை அனுப்பி வைத்தார்.
அங்கு பரிசோதித்த டாக்டர், மணிமாறன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

