ADDED : செப் 20, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், காலி பணியிடங்களை நிரப்பவும், விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்திக்க கூடாது', உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாஜூதீன், நிர்வாகி ரவிக்குமார், ஐ.டி.ஐ., ஊழியர் சங்க நிர்வாகி கோவலன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க நிர்வாகி தமிழ்பரமன், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன்,சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.