ADDED : அக் 31, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:  தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
3 சதவீத அகவிலைப்படியை ஜூலை 1 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உடையாளி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கமாவட்ட நிர்வாகி காமேஷ்வரன் உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர்.

