sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்

/

பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்

பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்

பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்


ADDED : அக் 31, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முடங்கியுள்ளது.

உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம் 2 ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்தது.

தரைத்தளம் இல்லாமல் 2 மாடிகளை கொண்ட இந்த புதிய கட்டடம் கட்டி முடித்து காட்சி பொருளாக உள்ளது. திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 72 படுக்கைகளுடன் , புதிய கட்டடத்திற்கு 32 படுக்கை வசதியும் கேட்கப்பட்டுள்ளது . இங்கு 100 படுக்கை வசதிகள் கிடைத்தால் கூடுதல் டாக்டர் பணியிடங்கள் கிடைக்கும். விரைவாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

இது குறித்து மருத்துவ அலுவலர் ஜின்னாவிடம் கேட்டதற்கு , ''அது சம்பந்தமாக நீங்கள் தான் இணை இயக்குநரிடம் கேட்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்






      Dinamalar
      Follow us