ADDED : ஆக 24, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் ஜெரால்டு தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் பரமேஸ்வரன், துணைத்தலைவர் அழகுராஜா முன்னிலை வகித்தனர்.
கிளை செயலாளர் பவானி, பொருளாளர் பாண்டியராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி இடத்தில் வட்டக்கிளைக்கு 2026 ஜன., க்குள் அலுவலகம் கட்டுவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-