/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2024 07:32 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுப்பணியாளர் சங்கம், ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷன் கடை பணியாளர் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைவர் வகித்தார்.
அரசுப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சேதுராம் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளர்களுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்த அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் காமாட்சிமுருகேசன், பொன்அமைதி, ஜெயபிரகாஷ், அய்யனார், அழகர்சாமி, பன்னீர்செல்வம், பாண்டி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.