/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் தனிக்கவனம்
/
சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் தனிக்கவனம்
சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் தனிக்கவனம்
சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள் தனிக்கவனம்
ADDED : ஜன 17, 2025 05:43 AM
கம்பம்: சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
நாள்பட்ட சர்க்கரை - நோய் பாதித்தவர்களுக்கு கண், சிறுநீரகம், நரம்பு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளை ஆண்டிற்கு ஒரு முறை இந்த மூன்று உறுப்புக்களையும் அதன் செயல்பாடுகளை பரிசோதித்து தேவைப்படும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண் ஏற்படுவது , கால்களில் மதமதப்பு, உணர்ச்சியற்று போவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் .
குறிப்பாக கால்கள், பாதங்களில் அடிப்பாகங்களில் புண்கள் ஏற்பட்டு குணப்படுத்த முடியாமல் விரல்களை அகற்றுவது, கால்களை அகற்றும் பிரச்னைகள் ஏற்படுகிறது.எனவே பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த பொதுச் சுகாதாரத்துறை டாக்டர்களை அறிவுறுத்தியுள்ளது.
நோயாளிகள் அந்த கண்ணாடியில் பாதங்களை பார்த்து அறிகுறிகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வார்கள். தற்போது அனைத்து டாக்டர்களும், சிகிச்சைக்கு வரும் நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கென டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் சர்க்கரை நோயாளிகளின் பாத பராமரிப்பில் கவனம் செலுத்துவதோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயாளிகளின் பாதங்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.