/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த ரோட்டால் தடுமாறி விழும் அரசு அலுவலர்கள்; கண்டு கொள்ளாத தேனி பி.டி.ஓ.,
/
சேதமடைந்த ரோட்டால் தடுமாறி விழும் அரசு அலுவலர்கள்; கண்டு கொள்ளாத தேனி பி.டி.ஓ.,
சேதமடைந்த ரோட்டால் தடுமாறி விழும் அரசு அலுவலர்கள்; கண்டு கொள்ளாத தேனி பி.டி.ஓ.,
சேதமடைந்த ரோட்டால் தடுமாறி விழும் அரசு அலுவலர்கள்; கண்டு கொள்ளாத தேனி பி.டி.ஓ.,
ADDED : நவ 25, 2024 07:03 AM

தேனி: 'தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முல்லை நகர், அரசு அலுவலர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், பலர் தடுமாறி விழுகின்றனர். இந்த ரோடு அமைத்து 5 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் புதிய ரோடு அமைக்க வாய்ப்பில்லை.' என, தேனி பி.டி.ஓ., சரவணக்குமார் தெரிவித்தார்.
அரண்மனைப்புதுார் ஊராட்சி முல்லை நகரில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த பகுதியில் ஓராண்டிற்கு மேலாக தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனாலும் அலுவலகத்திற்கு செல்லும் முல்லை நகர் தேவநேயப்பாவாணர் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் பலர் தடுமாறி விழுகின்றனர். அரசு அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை.', என்றனர்.
தேனி பி.டி.ஓ., சரவணக்குமாரிடம் கூறியதாவது: அந்த ரோடு அமைத்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இதனால் புதிய ரோடு அமைக்க வாய்ப்பில்லை. ரோட்டினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளங்களை அவ்வப்போது மண் கொண்டு சீரமைக்கின்றோம். ஆறு மாதங்களுக்கு பிறகு தான் புதிதாக ரோடு அமைக்க முடியும். அரண்மனைப்புதுார் ஊராட்சியில் கூறி தெரு விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்., என்றார்.
நான்கு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத வகையில் தரமற்ற ரோடு அமைத்த ஒப்பந்தகாரர் மீது ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.