/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய் கிராமங்களை பிரிக்க அரசாணை பிறப்பித்தும் முடக்கம்: எதிர்பார்த்த பலன் இல்லை என வி.ஏ.ஓ.,க்கள் மவுனம்
/
வருவாய் கிராமங்களை பிரிக்க அரசாணை பிறப்பித்தும் முடக்கம்: எதிர்பார்த்த பலன் இல்லை என வி.ஏ.ஓ.,க்கள் மவுனம்
வருவாய் கிராமங்களை பிரிக்க அரசாணை பிறப்பித்தும் முடக்கம்: எதிர்பார்த்த பலன் இல்லை என வி.ஏ.ஓ.,க்கள் மவுனம்
வருவாய் கிராமங்களை பிரிக்க அரசாணை பிறப்பித்தும் முடக்கம்: எதிர்பார்த்த பலன் இல்லை என வி.ஏ.ஓ.,க்கள் மவுனம்
ADDED : டிச 20, 2024 03:36 AM
கம்பம்: வருவாய் கிராமங்களை பிரிப்பதற்கு அரசாணை பிறப்பித்தும்செயல்பாடு இன்றி முடங்கியுள்ளது. எதிர்பார்த்த பலன் இல்லைஎன கருதி வி.ஏ.ஓ.க்கள் சங்கம் ஆதரவு தெரிவிக்காததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருவாய் கிராமங்கள் பிரிப்பு பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ.க்கள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். வருவாய் கிராமங்கள் மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 97 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் குறைந்தது இரண்டாகவும், அதிகபட்சம் 5 கிராமங்களாக பிரிக்க தகுதி உள்ளது.
ஒரு லடசம் பேருக்கு ஒரு வி.ஏ.ஓ.,
மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் அதிகபட்சமாக நிலப்பரப்பு 300 எக்டேர் உள்ளது. தேனி மாவட்டத்தில் மேகமலை 8 ஆயிரம் ஏக்டேர், மயிலாடும்பாறை கடமலைக்குண்டு 8 ஆயிரம் எக்டேர் உள்ளது. தேனி நகரம் 2 ஆயிரம் எக்டர், மக்கள் தொகை லட்சக்கணக்கில் உள்ளது. தேனிக்கு ஒரே ஒரு வி.ஏ.ஓ.,பணியிடம் உள்ளது. முத்துலாபுரம், காமயகவுண்டன்பட்டி, தேவாரம், மார்க்கையன்கோட்டை, சீப்பாலக்கோட்டை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பெரிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இரண்டும் அதற்கும் மேலும் பிரிக்கலாம். கூடலூரில் மட்டும் 4 வி. ஏ. ஒ.. க்கள் இருக்கும் போது, தேனிக்கு ஒரு வி.ஏ.ஓ., என்பது எப்படி சரியாகும். எனவே வருவாய் கிராமங்களை பிரிப்பதற்குரிய அரசாணை வெளியிட வி. ஏ. ஒ. க்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று கடந்தாண்டு வருவாய் நிர்வாக ஆணையரகம் அதற்கான அரசாணையை பிறப்பித்தது.
200 கிராமங்களாக அதிகரிக்கும்
மாவட்டத்தில் உள்ள 97 வருவாய் கிராமங்கள் பிரிக்கும் போது 200 கிராமங்கள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது குறைந்தது 100 வி.ஏ.ஓ..க்கள் பணியிடங்களை புதிதாக உருவாகும். எனவே புதிய பணியிடங்கள் ஏற்படுத்தி பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அரசு பிறப்பித்த அரசாணையில் வி. ஏ.ஓ. க்கள் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறான அம்சங்கள் இடம் பெற்றது. இதனால் வி.ஏ.ஓ.. க்கள் மத்தியில் அரசாணைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனவே அந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டது.
மாவட்ட வி. ஏ.ஓ.க்கள் சங்க செயலாளர் ராமர் கூறியதாவது :
வருவாய் கிராமங்களை பிரிக்க கோரிக்கையின் அடிப்படையில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சிறிய கிராமங்களை ஒன்றாக இணைக்கும் வகையில் உள்ளது. உதாரணத்திற்கு கருநாக்கருத்தப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமங்களை ஒன்றாக இணைக்கவும், சின்னமனுாரை இராண்டாக பிரிக்கும் வகையில் அரசாணையில் கூறப்பட்டிருந்தது. வருவாய் கிராமம் பிரிப்பில் எந்த பலனும் ஏற்பட போவதில்லை. எனவே நாங்கள் அமைதியாகி விட்டோம் என்றார்.