/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் விபத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பலி நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

ADDED : டிச 31, 2024 06:36 AM
தேனி: தேனி அருகே டூவீலரில் சென்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் 49, நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
மதுரை தொட்டியபட்டி செல்லாண்டியம்மன் கோயில் தெரு சாமிநாதன் 49.
இவர் மதுரை பேரையூர் தாலுகா பாறைப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.இவரது மனைவி ஜெயபாக்கியம் 48, இவர் அதே தாலுகா துள்ளிக் குட்டிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இத் தம்பதியின் மகள் பிரியதர்ஷினியை பெரியகுளத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
மகளை பார்ப்பதற்காக தேனி வந்த சாமிநாதன், கண்டமனுார் பகுதிக்கு சென்று பெரியகுளத்திற்கு டூவீலரில் சாமிநாதன் திரும்பினார்.
அப்போது கொடுவிலார்பட்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது நாய் குறுக்கே வந்தது. இதில் திடீரென பிரேக் பிடித்ததால் டூவீலர் நிலை தடுமாறி சாமிநாதன் கீழே விழுந்து, காயமடைந்தார்.
108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.