/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடு தேடி வரும் அரசு சேவை முகாம்; : நிதி செலவினங்களுக்கு திணறும் உள்ளாட்சிகள் விரக்தியில் வளர்ச்சித்துறை பணியாளர்கள்

ADDED : ஜூலை 28, 2025 05:07 AM
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் வீடு தேடி வரும் அரசு சேவைகள் (உங்களுடன் ஸ்டாலின்) முகாம் ஜூலை 15ல் துவங்கி, அக்.17 ல் நிறைவு பெறுகிறது. முகாம் நடைபெறும் பகுதிகளில் வழக்கமான பணிகளை தவிர்த்து முகாம் பணிகளையே முழுமையாக செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் ரோடு, பள்ளி வகுப்பறை கட்டுமானம், பழுது பார்த்தல், மிகச் சிறப்பாக செயல்படுத்தி முடிக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், பணியாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக கவலையில் உள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறையை முழுமையாக பயன்படுத்துகின்றனர். முகாமிற்கு தேவைப்படும் சேர், பந்தல், குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்யவும் மனுக்கள் பெறவும், மனுக்கள் எழுதி தரவும் மனுக்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக கொடுக்கவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், பணியாளர்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முகாம் நடத்தி முடிக்க ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது. இதற்கான நிதி ஆதாரம் பெரும்பாலான ஊராட்சிகளில் இல்லை. ஊராட்சி பணத்தை முன் ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது. செலவு செய்த பணம் மீண்டும் பெறுவதற்கு பல வாரங்களாகிவிடும். இந்த பணமும் பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கான நிதியில் இருந்து தான் பெற வேண்டும். அடிப்படை வசதிகளில் செய்து கொடுப்பதிலும், சுணக்கம் ஏற்படாமல் பார்க்க வேண்டும். இது போன்ற நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காமல் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம் என, கவலையுடன் தெரிவித்தனர்.