/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
/
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
சுற்றுச்சூழலை மேம்படுத்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அசத்தும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி
ADDED : ஜன 08, 2024 04:54 AM

உயிர் வாழத் தேவை ஆக்சிஜன். அந்த ஆக்சிஜனை பெறுவதற்கு மரங்கள் அவசியம். அதனால் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் அவசியத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் இருந்தே கற்றுக் கொடுத்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் வாழ ஆக்சிஷன் கிடைக்கும். நாம் வாழும் இந்த பூமியை சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அவர்களுக்கு தர வேண்டும்.
அதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று மரங்கன்றுகளை அதிகளவில் நட்டு வளர்ப்பதுதான். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு நடுவில் கூடலுார் நகராட்சி அமைந்திருந்தாலும் கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கத்தான் செய்கிறது. காரணம் மரங்கள் குறைவு. மேலும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பூமி வெப்பமயமாகிறது.
இந்த உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு பூமியில் சீர்கேடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு மிக முக்கியமான காரணி நாம் அதிகமாக பயன்படுத்தும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் வளர்ச்சிதான்.
இதற்கு தீர்வு காணும் வகையில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து, ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கீழக்கூடலூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி களம் இறங்கியுள்ளது.
பராமரிப்பு
அம்பிகா, தலைமை ஆசிரியை: சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு மரக்கன்றுகளின் பயன்களையும் அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளியிலேயே விதைகளை கொடுத்து மாணவர்களே நட்டு வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்கள். அவரவர் மரக்கன்றுகளுக்கு அவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்கு வரும்போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிய பிறகுதான் வகுப்பறைக்குள் வரும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்., என்றார்.
சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
அழகேசன், ஆசிரியர்: பள்ளியில் 50 ஆண்டுகள் வயதுடைய வேம்பு, 13 ஆண்டுகள் ஆன நாவல் மரத்திலிருந்து விழும் விதைகளையும் சேகரித்து விதைப் பந்துகள் உருவாக்க மாணவர்களை பள்ளியின் சார்பாக ஊக்கப்படுத்தி வருகின்றோம். காலை நேரத்தில் தாவரங்களின் பெயர்களையும் மூலிகை தன்மையையும் தினந்தோறும் எடுத்துரைத்து வருகின்றோம்.
நாவல், வேம்பு, வில்வம், மயில்கொன்றை, மா, ஆலமரம், புங்கை, அரசமரம் என 150 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பள்ளியில் மாணவர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக சான்றிதழும் வழங்கி வருகின்றோம். ஆரம்பப் பள்ளி மாணவர்களில் இருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தால் மாசில்லா கூடலூரை விரைவில் அடையலாம்., என்றார்.