ADDED : ஜன 29, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: திரவியம் கல்வியியல் கல்லூரியில் 93 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் தலைமை வகித்தார்.
செயலாளர் டாக்டர் ஹேமலதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் கணேசன், மூன்று கல்வியாண்டில் பி.எட்., படித்த மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பேராசிரியர்கள், பேராசிரியர் மாணவிகள் பங்கேற்றனர்.