ADDED : மே 02, 2025 06:55 AM
தேனி, மே 2-
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தின கிராம சபைக்கூட்டம் நடந்தது.
தேனி ஒன்றியம் அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் ஒன்றிய உதவிப்பொறியாளர் சுபா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம வனக்குழு அமைத்தல், மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 15 பொருட்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. முல்லை நகரில் சேதமடைந்த ரோடுகளை சீரமைத்து தர கோரி குடியிருப்போர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கொடுவிலார்பட்டியில் பி.டி.ஓ., மைதிலி தலைமையில் கூட்டம் நடந்தது. மண்டல டி.பி.டி.ஓ., பானுமதி முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலாளர் வேல்முருகன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
நாகலாபுரம் ஊராட்சியில் சிவலிங்கநாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய பற்றாளர் சுபா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார். பாலகிருஷ்ணாபுரத்தில் சாக்கடை பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.