/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது
/
நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரன் கைது
ADDED : ஜூன் 04, 2025 01:18 AM

மூணாறு: அடிமாலி அருகே நகைக்காக பாட்டியை கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே மச்சிபிளாவ் பகுதியில் மேரி 95, தனது இளைய மகன் தம்பி, மருமகள் டிஷா ஆகியோருடன் வசித்து வருகிறார். ஜூன் ஒன்றில் மகன், மருமகள் சர்ச்க்கு சென்றதால் வீட்டில் மேரி தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த மேரியின் மூத்த மகன் மைக்கேலின் மகன் அபிலாஷ் 44, பாட்டியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றதுடன், அவர் அணிந்து இருந்த இரண்டரை பவன் தங்க செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய மேரியை, சர்ச்சில் இருந்து வீடு திரும்பிய மகன், மருமகள் ஆகியோர் மூணாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததுடன் போலீசிலும் புகார் அளித்தனர். அடிமாலி போலீசார் அபிலாஷை கைது செய்தனர். இது போன்று பல்வேறு குற்றப்பின்னணி வழக்குகளில் அபிலாஷ் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.