/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லறை திருநாள்: திரளாக கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
கல்லறை திருநாள்: திரளாக கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 03, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று காலை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நவ . 2 ல் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கின்றனர். நேற்று காலை கம்பம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் திரளாக சென்றனர். அங்குள்ள கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மாலை அணிவித்து ஜெபம் செய்தனர்.
பாதிரியார் பாரிவளன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.