தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வறட்சியால் தரிசாக மாறிய பசுமை வயல்கள்

 வறட்சியால் தரிசாக மாறிய பசுமை வயல்கள்

 வறட்சியால் தரிசாக மாறிய பசுமை வயல்கள்


ADDED : ஆக 29, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பசுமை வயல்கள் இந்த ஆண்டு பருவத்தில் தரிசாக உள்ளன.

மூல வைகை ஆற்றில் வரும் நீரால் அம்மச்சியாபுரம் கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் நிரம்பி இப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறும். ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் நெல் சாகுபடி பிரதானமாகும்.

கோடை சாகுபடியாக காய்கறிகள், மக்காச்சோளம் ஆகியவையும் பயிராகும்.

கடந்த பல மாதமாக மழை இல்லாததால் நேரடி பாசனம் தரும் கண்மாய்கள் வறண்டு விட்டன. ஆங்காங்குள்ள கிணறுகளிலும் நீர்சுரப்பு குறைவால் நடப்பு பருவத்தில் விவசாயத்தை துவக்காமல் நிலங்களை தரிதாக விட்டுள்ளனர்.

ஆண்டு முழுதும் பசுமையாக காட்சியளிக்கும் இப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது தரிசாக கிடப்பது பலருக்கும் கவலை ஏற்படுத்தி உள்ளது. நெல் சாகுபடி பாதிப்பு கால்நடை தீவனத்திற்கான வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படுத்தி விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us