ADDED : ஆக 29, 2026 12:42 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், 'உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.1400ஐ 2026 பிப்., முதல் நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி,' ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜானகி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிககள் துரைராஜ், சிவமணி, மற்ற சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ரவிக்குமார், ஜெயபாண்டி, முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
