/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுமை முதன்மையாளர் விருது விண்ணப்பம் வரவேற்பு
/
பசுமை முதன்மையாளர் விருது விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜன 05, 2024 04:06 AM
தேனி : தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள் அல்லது அமைப்புகளை தேர்வு செய்து பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இவ்விருது 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், நிலைத்த வளர்ச்சி, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் மறு சுழற்சி உள்ளிட்ட 13 தலைப்புகளில் விண்ணப்பிப்போர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மாசுகட்டுப்பாட்டு வாரிய இயைதளம் www.tnpcb.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாளர் ஏப்.,15 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.